இலங்கைசெய்திகள்

மாதகல் வீதியில் ஆண் ஒருவரின் சடலம்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை – மாதகல் வீதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரது சடலம் இன்று (04) இனங்காணப்பட்டுள்ளது.

சடலமாக உள்ளவரின் முகம் முழுமையாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. அத்துடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளும் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

இதுவரையிலும், சடலமாக உள்ளவர் இனங்காணப்படாத நிலையில், இறந்தமைக்கான காரணமும் தெரியவில்லை.

இந்நிலையில், இது கொலையா அல்லது விபத்தா என்ற கோணத்தில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Back to top button