இலங்கைசெய்திகள்

மஹிந்தவை கைதுசெய்யக்கோரி வழக்குத்தாக்கல்

முன்னாள் பிரதமர் மஹிந்தராஜ பக்ச உட்பட 7 பேரை கைதுசெய்ய உத்தவிடுமாறு கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணி ஒருவரால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்று கோட்டை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், எதிர்வரும் 17 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ் மனுவில், மஹிந்தராஜ பக்ச, ஜோன்ஸன் பெர்னாண்டோ, சஞ்சீவ எதிரிமான்ன, சனத் நிஷாந்த ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், மொரட்டுவ மாநகரசபையின் தலைவர் சமன்லால் பெர்னாண்டோ, மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button