நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை வழிமறித்த போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மரியாதை அழித்து வாகனம் வெளியேற அனுமதித்தனர்.
நேற்றைய (06) நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை விட்டு தமது வாகனத்தில் பயணித்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற நுழைவாயிலில் அனைத்துப்பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
இதன்போது, நாடாளுமன்ற நுழைவாயில் ஊடக வெளியேறிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரீன் பெர்ன்ணாடோ, மனுச நாணயக்கரா, ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் பயணித்த வாகனத்தை போராட்டகாரர்கள் வழிமறித்தனர். இதனால் போராட்டகாரர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.
இந்நிலையில், இவ்வாகனத்தொடரணியில் ஒரு வாகனத்தில் பயணித்த தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரை அவதானித்த போராட்டகாரர்கள் அவர்களுக்கு மரியாதை அழித்தததோடு, அவர்கள் தொடர்ந்து பயணிக்க அனுமதித்தனர்.
தற்போதைய ஊழல் அரசாங்கத்திற்கு எதிராக தமிழ்தேசியக்கூட்டமைப்பினர் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டுமென வாகனத்தில் இருந்த தமிழ்தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் போராடட்காரர்கள் கோரிக்கையும் விடுத்தனர்.
இந்நிலையில், பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் போராட்டகாரர்கள் இருக்கும்வரை நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.