நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வைக் காண்பதற்கு அரசாங்கத்தால் தனித்து எதையும் செய்ய முடியாது. எதிர்கட்சியும் இணைந்து செயற்பாட்டேல முடியும் என நீதி அமைச்சரும் – நிதி அமைச்சருமான அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (04) விசேட உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு நிதி பெறுவது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட் பேச்சுக்கள் சாதகமாக முடிந்துள்ளன. பேசப்பட்ட விடயங்களை நாம் ஒழிக்கவில்லை. அதுதொடர்பான விபரங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டும்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் சிறப்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சிறந்த ஒருவர் வந்தால், நான் எனது பதவியை இராஜினாமா செய்யவும் தயார். அனைவரும் ஒன்றிணைந்து தீர்வை தேட வேண்டும். இல்லாவிட்டால் லெபனானின் நிலைமையே இங்கு ஏற்படும்.” – என்றார்.