இலங்கைசெய்திகள்

கோட்டபாயவிற்கு எதிரான மக்கள் போராட்டத்தை முதலில் நாங்களே ஆரம்பித்தோம் – சாணக்கியன்

அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுவதற்கு தெற்கில் மக்கள் அஞ்சிய போது, மட்டக்களப்பிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களே ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பித்து வைத்தனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நேற்று (01) மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இன்று காலையில் மரண வீடு ஒன்றிற்கு சென்றிருந்த போது தாய் ஒருவரை சந்தித்து பேசினேன். அவர் எங்கே செல்கின்றீர்கள் என என்னிடம் கேட்டார், நான் இந்த கூட்டத்திற்கு வருகை தரவுள்ளமையினை அவரிடம் சொன்னேன்.

அவர் என்னிடம், அங்கே என்ன பேசப்போகின்றீர்கள் என என்னிடம் கேட்டார். பின்னர் “கோட்டா கோ ஹோம்” என கூறாதீர்கள். “கோட்டா கோ சிறைச்சாலை” என கூறுங்கள் என சொன்னார், அது உண்மைதான்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தற்போது தான் அரசாங்கத்திற்கு எதிராக கண்டி முதல் கொழும்பு வரையான போராட்டத்தினை முன்னெடுத்துள்ளார்.

ஆனால், நாங்கள் இந்த கோட்டபாய அரசாங்கம் வேண்டாம் என்று தெரிவித்து இரண்டு வருடங்களுக்கு முன்னரே பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தினை போராட்டத்தினை ஆரம்பித்தவர்கள்.” எனத் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Back to top button