ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸில் இருந்து அரசபக்கம் தாவி அமைச்சுப் பதவி பெற்ற நஸீர் அஹமட்டை கட்சியின் உறுப்புரிமை மற்றும் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் நீக்கப்படுவதாக கட்சியின் தலைவர் ரவூப்ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஐக்கியமக்கள் சக்தி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற நஸீர் அஹமட் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வந்திருந்தார். இந்நிலைமையில் அமைச்சுப் பதவியையும் பெற்றிருந்தமையினால் முஸ்லீம் மக்களின் எதிர்ப்பினைப் பெற்றிருந்தார். இந்நிலையிலேயே கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.