இந்தியா மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயத்தை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சர்வதேச ஊடகங்களிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்தியாவினால் வழங்கப்படும் நிதி எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கு பயன்படுத்தப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.