இலங்கையில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.
ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அவசரநிலை அமுலுக்கு வரும் பட்டசத்தில் ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்கள் அதிகரிப்படுவதுடன், பொலிஸாருக்கான அதிகாரங்களும் அதிகரிக்கும்.
இதன் மூலம் குறிப்பாக தேவைப்படும் ஒருவரை நீதிமன்ற உத்தரவின்றியே கைதுசெய்து குறிப்பிட்டகாலம் வரை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்செய்யாமல் பொலிசார் தடுத்துவைக்க முடியும்.
தேவைப்படும் இடத்தில் துப்பாக்கிப் பிரயோகம் செய்யவும் பொலிசாருக்கு அதிகாரம் கிடைக்கும்.
பொது இடங்களில் மக்கள் கூடுவது மட்டுப்படுத்தப்படும். இது ஆர்ப்பாட்டங்கள், கலவரங்கள் உருவாவதைத் தடுக்க பயன்படுத்தப்படும்.
வன்முறைகள் ஏற்படும் போது வன்முறையில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் பொலிசாருக்கு அனுமதி வழங்கப்படலாம்.
தேவையான இடங்களில் ஊரடங்குச் சட்டங்களை பிறப்பிக்க முடியும். ஊடகங்கள் மீது கட்டுப்பாடு கொண்டுவரமுடியும். தேவைப்படின் தணிக்கைகள் அமுல்படுத்தப்படும். இப்படியான பல அதிகாரங்கள் அவசரநிலை பிரகடனத்தால் பொலிஸாருக்கு கிடைக்கும்.