தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
கடந்த 15 ஆம்திகதி இச்சந்திப்பு முன்னர் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தபோதும் இறுதிநேரத்தில் இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச்சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் இரா.சம்பந்தன், தமிழரசுகட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், புளொட் தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் பங்குபற்றுவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.