இலங்கைசெய்திகள்

முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்படவேண்டும் ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை

“பொதுத்தேர்தல் அல்ல, முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டும். இதுவே உறுதியான ஆட்சிக்கு வழிசமைக்கும்.” ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஏன் ஜனாதிபதித் தேர்தலை முதலில் கோரியுள்ளார் என ஊடகங்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு எமது கட்சி வெற்றி பெறும் பட்சத்தில், மற்றுமொரு கட்சி உறுப்பினர் ஜனாதிபதியாக இருந்தால் அவர் தடையை ஏற்படுத்துவார். கடந்த ஆட்சியில் மைத்திரி செயற்பட்ட விதம் அனைவருக்கும் தெரியும். எனவேதான் முதலில் ஜனாதிபதித் தேர்தலைக் கோருகின்றோம்.

எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைக் கட்சிதான் தீர்மானிக்க வேண்டும். அதில் தலைவரும் ஆதிக்கம் செலுத்துவார். கட்சி எடுக்கும் முடிவை நாம் ஏற்போம். ஆனால், பொதுவேட்பாளர் வெளியில் இருந்து வர முடியாது. எமது கட்சி வேட்பாளர், பொதுவேட்பாளராகலாம்” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button