வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (07) முன்னெடுக்கப்பட்டது.
“வரவேண்டும் வரவேண்டும் ஐ.நா அமைதிப்படை வரவேண்டும்”, “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி”, “அரசியல் கைதிகளை நிபந்தனையில்லாமல் விடுதலை செய்”, “பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு” , “சர்வதேசமே நாம் அழுவது கேட்கவில்லையா?”, “வேண்டும் வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும்”, “தமிழரின் படுகொலைக்கு அனைத்துலக விசாரணை வேண்டும்”, “எங்கே எங்கே உறவுகள் எங்கே?” போன்ற பல்வேறுபட்ட கோசங்களை கோரிக்கைகளாக முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.