இலங்கைசெய்திகள்

அரசாங்கத்தில் இருந்து வெளியேற ஶ்ரீலங்கா சுகந்திரக்கட்சி தயார்

சரியான நேரம் சரியான சந்தர்ப்பம் அமையும்போது கட்சியின் மத்திய குழுவின் அனுமதியுடன் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவதற்கு தயாராக இருப்பதாக ஶ்ரீலங்கா சுகந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் நேற்று (27) இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுகந்திரக்கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும், ஶ்ரீலங்கா சுகந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button