பெரும் இனவாதக் கொள்கையுடன் மிகவும் பலம் பொருந்தி கட்சியாக இருந்த மொட்டுக்கட்சி தற்போது பல்வேறு உடைவுகளாக சிதறி பல புதிய கட்சிகள் தோற்றம் பெறுகிறுன்றன.
அவ்வகையில், மொட்டுவின் கடும் விசுவாசியாக செயற்பட்ட டலஸ் அழகப்பெரும அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி வாக்கெடுப்பில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார்.
“தான் தோல்வியடைந்ததைப் பற்றிக் கவலைப்படவில்லை. மக்களுக்காகவே போட்டியிட்டேன். பதவி முக்கியமில்லை. மக்கள் தான் முக்கியம். ( எது அவருக்கு முக்கியமோ நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும்) என கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், டலஸ் அழகப்பெரும, மஹிந்தவின் நெருங்கிய சகா விமல் மற்றும் வாசு ஆகியோர் சேர்ந்து புதிய ஒரு கட்சியை ஆரம்பிக்கப் போவதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் இணையுமாறு எதிர்கட்சிகளின் உறுப்பினர்கள் சிலருக்கு அழைப்புக்கள் வந்துள்ளன. எங்களுக்கு அவ்வாறான அழைப்புக்கள் ஏதும் வரவில்லை. (அது தான் கவலையோ தெரியவில்லை) அழைப்பு வந்தாலும் தாம் ஒரு போதும் அரசாங்கத்துடன் இணையப்போவதில்லை எனவும், விரைவில் புதிய கட்சி ஆரம்பிக்கப்படுமெனவும் வாசு அதிரடியாக தெரிவித்துள்ளார்.