வட்டுக்கோட்டை பொலிஸ்பிரிவிட்குட்பட்ட பொன்னாலை காட்டுப்பகுதிக்குள் வயோதிப பெண்ணொருவை தூக்கிச்சென்று தனது காம ஆசையை தீர்க்க முயன்ற சிறுவனை பொலிஸார் கைதுசெய்யதுள்ளனர்.
63 வயதுடைய வயோதிப பெண்மணியை துணிகரமாக கடத்திச்சென்று பாலியல் பலத்காரம் செய்ய முயன்ற 15 வயது சிறுவனை தள்ளிவிட்டு குறித்த வயோதிபபெண்மணி தப்பியோடியுள்ளார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்மணியால் வட்டுக்கோட்டை பொலிஸ்நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சிறுவன் பொலிஸரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தால் குறித்தபகுதியில் பதற்றமான நிலைமை காணப்பட்டதுடன், இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.