முகமாலைப் பகுதியில் கண்ணிவெடியகற்றும் ஊழியர் ஒருவர் கண்ணிவெடி வெடித்ததில் கை சிதறி படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முகமாலைப் பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.
மதிய உணவை அருந்திவிட்டு கை கழுவச்சென்ற போது நிலத்தில் காணப்பட்ட மர்மமான பொருளை எடுத்து நிலத்தில் குத்திப்பார்த்தபோது கண்ணிவெடி வெடித்து கை சிதறியுள்ளது.
படுகாயமடைந்தவர் சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வெடிப்புச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.