இலங்கைசமீபத்திய செய்திகள்
தனியார் பஸ்கள் குறைந்தளவே சேவையில் ஈடுபடும்
நாட்டில் இன்று 15 முதல் 20 வீதமான தனியார் பேருந்துகளே சேவையில் ஈடுபடுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவுகின்ற பாரிய எரிபொருள் பற்றாக்குறையே இதற்கான காரணம் எனவும், இதற்கான தீர்வு தமக்கு இன்னும் கிடைக்கவில்லை என குறித்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.