இலங்கைசமீபத்திய செய்திகள்
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு போலியான தகவல்
அரசாங்க ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளிவந்த தகவல் பொய்யானது என பிரதமர் ஊடகப் பிரிவு அறிக்கை வெளியீட்டுள்ளது.
சமர்ப்பிக்கப்படவிருக்கும் இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தில் நிவாரணங்கள் வழங்கப்படவுள்ள அதே நேரம், சுகாதாரம் மற்றும் கல்வியை தவிர அனைத்து அமைச்சுகளுக்குமான ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் என்றே பிரதமர் குறிப்பிட்டுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.