தற்போது நாடாளுமன்றத்தை சுற்றிய பகுதிகளில் பதற்றமான நிலைமை காணப்படுவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக அதிகளவு பொலிஸாரும், இராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (08) பல்கலைக்கழக மாணவர்களால் நாடாளுமன்றம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மாணவர்களை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.