இலங்கை
14 மாணவர்கள் குளவி கொட்டி பாதிப்பு!
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட நோர்வூட் எலிபடை தமிழ் வித்தியாலய மாணவர்கள் 14 பேர் இன்று காலை 7.30 மணியளவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் பாடசாலைக்குச் செல்லும்போது, அப்பகுதியில் இருந்த மரத்தில் காணப்பட்ட குளவிக் கூடே இவ்வாறு கலைந்து அவர்களைக் கொட்டியுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்கள் தரம் 5,7,8,9,10,11 வகுப்பறைகளைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகள் எனப் பொலிஸார் மேலும் கூறினர்.
குளவிக் கொட்டுக்கு இலக்கான மாணவர்களில் 4 பேர் தொடர்ந்தும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும், 10 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.