இலங்கைசெய்திகள்

மக்கள் போராட்டங்கள் தொடர வேண்டும் – அநுர வேண்டுகோள்

ஜனாதிபதி கோட்டபாய தலைமையிலான அரசு பதவி விலகும்வரை நாட்டு மக்கள் தொடர்ந்து போராட வேண்டுமென ஜே.வி.பியின் தலைவர் அநுர தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசாங்கம் எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு கோட்டபாய அரசிடம் தீர்வு திட்டம் இல்லை. ஜனாதிபதி பதவி விலக வேண்டும். அதன்பின்னர் அரசு பதவி விலக வேண்டும். இவ்விரு விடயங்களும் நடந்தால் அடுத்த கட்டம் தொடர்பில் விவாதிக்க நாம் தயார். ஆனால் ஜனாதிபதி பதவி விலகமாட்டார் என ஆளுங்கட்சியினர் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர்.

கோட்டபாய அரசாங்கம் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தியே மக்கள் போராடுகின்றனர். மக்கள் கோரிக்கை ஏற்கப்படாது என்பதே அரசின் நிலைப்பாடாக உள்ளது. எனவே, தமது போராட்ட இலக்கை அடையும்வரை மக்கள் போராட்டத்தை கைவிடக்கூடாது. மக்கள் போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். ஜே.வி.பியாலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.” – என்றார்.

Related Articles

Leave a Reply

Back to top button