தாய்லாந்து பிரதமர் இலங்கைக்குப் வருகைதரவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இத் தகவலை வெளியிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கை, இந்தியா, தாய்லாந்து உட்பட 7 நாடுகள் அங்கம் வகிக்கும் பிம்ஸ்டெக் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு இம்முறை இலங்கையில் நடைபெறும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் தாய்லாந்து பிரதமர், கொழும்பு வந்து, அடுத்த தலைமைப் பதவியை ஏற்பார். ஏனைய தலைவர்கள் ‘ஒன்லைன்’ மூலம் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று தெரிவித்தார்.