இலங்கைசெய்திகள்

தென்மராட்சியின் முன்னணி கல்விக் கழகத்தின் புதிய நிர்வாகத் தெரிவு

மட்டுவில் தெற்கு வளர்மதி சனசமூக நிலையத்தின் உப அமைப்பான வளர்மதி கல்விக் கழகத்தின் புதிய நிர்வாகத்தெரிவு இன்று (06) வளர்மதி கல்விக் கழக நவீன கட்டடத்தில் இடம்பெற்றது.

2022 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவில் தலைவராக கனகலிங்கம் காண்டீபன் அவர்களும், செயலளாராக மு.மகிந்தன் அவர்களும், பொருளாளராக முருகன் நவநீதன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

நீண்டகால பாரம்பரியத்துடன் கூடிய வரலாற்று பிண்ணனி கொண்ட வளர்மதிக் கல்விக்கழகத்தின் சிறப்புக்களை இந் நேரத்தில் பதிவிடுது சிறப்பாகும்.

அவ்வகையில், 35 வருடத்திற்கு மேற்பட்ட கல்விப் பாரம்பரியத்தைக் கொண்டு இன்றும் மாணவர்களுக்கான கல்வியை திறம்பட வழங்குவதில் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது.

வளர்ந்து வரும் நவீன காலத்தில் கல்வி நிலையங்கள் பெரும்பாலும் தனியரால் வர்த்தக நோக்கில் நடத்தப்பட்டு வருகின்ற நிலையில் பொதுநோக்கத்தோடு 35 வருடங்களுக்கு மேலாக நிர்வாக கட்டமைப்போடு சிறப்பாக செயற்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.

வளர்மதி சனசமூக நிலையத்தின் கீழ் சிறப்புற நிர்வாக கட்டமைப்பு வருடா வருடம் தெரிவு செய்யப்பட்டு தனித்துவமாக இயங்கி வருகின்ற கல்வி நிலையமாகும்.

தென்மராட்சியில் 35 வருடங்களுக்கு மேலாக முன்னணி கல்வி நிலையமாக இயங்கி வருவதுடன் பல மாணவர்களை உயர்தர கல்விக்கு வித்திட்ட பெருமையோடு வளர்மதிக்கல்விக் கழகம் வீறுநடை போடுகின்றது.

தற்போது புதிய கட்டடத்தில் பாடசாலை நிர்வாக கட்டமைப்பு போன்று சிறப்பான முறையில் கற்றல் நடவடிக்கைகள் போதிக்கப்பட்டு வருகின்றது.

வருடாவருடம் பரிசளிப்பு விழா, நவராத்திரி விழா மற்றும் ஆசிரியர்தின நிகழ்வுகளை நடத்தி மாணவர்களை ஊக்குவித்து வருகின்றது.

தென்மராட்சியின் முன்னணி ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற சிந்தனையில் சிறப்பான முறையில் பொன்விழாவை நோக்கி நகர்ந்து வருகின்றது.

இவ்வாறான இன்னும் பல சிறப்புக்களோடு பார்போற்ற திகழ்ந்து வரும் வளர்மதிக் கல்விக் கழகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் ஒற்றுமையுடன் சிறப்பாக செயற்பட்டு வளர்மதிக் கல்விக் கழகத்தின் கல்விப்பணியை மேலும் சிறப்பாக்கிட ஐவின்ஸ் செய்தி இணையத்தளம் பெரும் மகிழ்வுடன் வாழ்த்துகின்றது.

Related Articles

Leave a Reply

Back to top button