
இலங்கை தமிழரசுகட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து நடத்தும் சமகால அரசியல் கருத்தரங்கம் எதிர்வரும் 12.02.2022 (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் கல்வியங்காடு இளங்கலைஞர் மண்டபத்தில் இவ் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
ஈழத்தமிழர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தின் வகிபாகம் என்னும் தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.வி.கே.விக்கினேஸ்வரன் கருத்துரையாற்ற உள்ளார்.
சமஷ்டித்தீர்வு செல்வா முதல் இன்று வரை முயற்சிகளும் முட்டுக்கட்டைகளும் என்னும் தலைப்பில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராசா உரையாற்றவுள்ளார்.
ஈழத்தமிழர் தீர்வு நோக்கிய செயற்பாடுகளும் உறுதியான ஐக்கியத்தின் முக்கியத்துவமும் என்னும் தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கருத்துரை வழங்க உள்ளார்.
நல்லாட்சி அரசின் தீர்வு நோக்கிய செயற்பாடுகளும் சமகாலத்தில் வடக்கு கிழக்கில் அரசின் முரண்பாடான செயல்திட்டங்களும் என்னும் தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உரையாற்றவுள்ளார்.
13க்கு அப்பாலான பேச்சுவார்த்தைகள் – பிரேமதாச தொடக்கம் மஹிந்த வரை என்னும் தலைப்பில் என்.ஶ்ரீகாந்தா கருத்துரையாற்ற வழங்க உள்ளார்.
ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வும் இலங்கையில் இந்திய பாதுகாப்பு நலன்களும் ஓர் அரசியல் பொருளாதாரப் பார்வை என்னும் தலைப்பில் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கம் உரையாற்ற உள்ளார்.
சர்வதேச அழுத்தங்களும் சமஷ்டித்தீர்வை அடைவதில் முன்னால் இருக்கும் வழிமுறைகளும் சந்தர்ப்பங்களும் சவால்களும் என்னும் தலைப்பில் அரசியல் ஆய்வாளர் எ.யதீந்திரா கருத்துரை வழங்க உள்ளார்.
ஈழத்தமிழர் அரசியல் தீர்வில் இந்தியாவின் பிராந்திய சர்வதேச முக்கியத்துவம் என்னும் தலைப்பில் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் உரையாற்ற உள்ளார்.
