யாழ்.மாவட்டத்தில் சர்வதேச மைதானத்தை அமைப்பதற்கு மாநகரசபை முதல்வரின் முயற்சி கட்சிகளால் மறுப்பு – மக்கள் ஆதங்கம்
யாழ்.மாவட்டத்தில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைப்பதற்கு யாழ்.மாநகர முதல்வர் எடுத்த முயற்சி மாற்றுக் கட்சி உறுப்பினர்களினால் மறுக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாநகரசபைக்குச் சொந்நமான 11 ஏக்கர் நிலப்பரப்பு கோண்டாவில் பகுதியில் உள்ளது. குறித்தநிலம் தற்போது எவ்வித பாவணையும் இல்லாது உள்ளது.
இருப்பினும் யாழ்.மாநகரசைபக்குட்பட்ட மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான கிணறுகள் உள்ளன. எதிர்வரும் காலங்களில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் யாழ்.மாநகர சபைக்குற்பட்ட பகுதிகளிற்கு நீர் விநியோக பணி ஆரம்பிக்கப்பட இருப்பதைக் கருத்திற்கொண்டு குறித்த நீர் விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்கப்படும்.
இதற்கான அனுமதியினை யாழ்.மாநகர முதல்வரால் மாநகரசபையில் அனுமதி கோரப்பட்டது.
இதற்கு ஈ.பி.டி.பி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அடியோடு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் யாழ்.மாவட்டத்தில் சர்வதேச துடுப்பாட்ட மைதானம் அமைக்ககின்ற பலரது எதிர்பார்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
கட்சிகளின் நலனுக்காவும், தமது இச்சைகளுக்காகவும் சிறந்த ஒரு திட்டத்தை செயற்படுத்த முற்படுவதை எதிர்க்கும் கட்சிகளின் உறுப்பினர்ளுக்கு மக்கள் கடும் விசனத்தை வெளியிட்டுள்ளனர்.