இலங்கைசமீபத்திய செய்திகள்

திருக்குமரன் அட்டகாசமான ஆட்டம் சென்.பிலிப்ஸ் அதிரடி

ஊரெழு றோயல் விளையாட்டு கழகத்தால் வடமாகண ரீதியில் நடத்தப்பட்டு வரும் வடக்கின் சமர் தொடரின் இன்றைய (12) போட்டிகளில் திருக்குமரன், சென்.பிலிப்ஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

முதலாவது போட்டியில் அராலி திருமகள் வி.கழத்தை எதிர்த்து உரும்பிராய் திருக்குமரன் வி.கழகம் மோதியது. அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய திருக்குமரன் வி.கழகம் 10:1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டாவது போட்டியில் அச்செழு வளர்மதி வி.கழத்தை எதிர்த்து அல்லைப்பிட்டி சென்.பிலிப்ஸ் வி.கழகம் மோதியது. இரண்டு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைக்காது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அல்லைப்பிட்டி சென்.பிலிப்ஸ் வி.கழகம் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

வடக்கின் சமர் தொடரின் நாளைய (13) போட்டிகளின் முதலாவது போட்டியில், ஏழாலை ஞானகலா வி.கழத்தை எதிர்த்து தீவகம் திருவள்ளுவர் வி.கழகம் மோதவுள்ளது.

இரண்டாவது போட்டியில், அராலி சில்வஸ்ரார் வி.கழகத்தை எதிர்த்து மெலிஞ்சிமுனை இருதயராஜா வி.கழகம் மோதவுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button