விளையாட்டு
நீயா? நானா? போட்டிக்கு மத்தியில் விக்கினேஸ்வரா மற்றும் நியூஸ்ரார் வெற்றி
வடமாகாண ரீதியில் ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்தால் நடத்தப்பட்டுவரும் “வடக்கின் சமர்” தொடரின் இன்றைய (11) போட்டியில் பெரும் சவாலுக்கு மத்தியில் புத்தூர் விக்கினேஸ்வரா வி.கழகம் மற்றும் மாதகல் நியூஸ்ரார் வி.கழகம் என்பன வெற்றி பெற்றுள்ளன.
முதலாவது போட்டியில் ஈவினை கலைமகள் வி.கழகத்தை எதிர்த்து புத்தூர் விக்கினேஸ்வரா வி.கழகம் மோதியது. இரண்டு அணிகளும் நீயா? நானா? என்ற பலத்த போட்டிக்கு மத்தியில் 3.2 கோல் கணக்கில் புத்தூர் விக்கினேஸ்வரா வி.கழகம் வெற்றி பெற்றது.
இரண்டாவது போட்டியில், வதிரி பொமர்ஸ் வி.கழகத்தை எதிர்த்து மாதகல் நியூஸ்ரார் வி.கழகம் மோதியது. இரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்த இப்போட்டியில் நியூஸ்ரார் வி.கழகம் 3:2 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.