இலங்கைசமீபத்திய செய்திகள்

ஒரேஞ் – நிருச்சிகன்
பேர்ப்பிள் – ரொனிஷான் வசம்
UKMPL இன் கள நிலவரம்

வீரர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் நடத்தப்பட்டு வருகின்ற UKM பிறிமீயர் லீக் போட்டிகள் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில், இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில், மயிலங்காடு ஞானமுருகன் அணி 10 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. அவ்வணி பங்குபற்றிய 5 போட்டிகளிலும் வெற்றிபெற்று முதல் நிலையை தக்க வைத்துள்ளது.

அத்துடன், நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் அதி கூடிய ஓட்ட எண்ணிக்கையைப் (139) பெற்று ஒரேஞ் தொப்பியை உரும்பிராய் கிரிக்கெற் கிளப் அணியைச் சேர்ந்த நிருச்சிகன் தன் வசப்படுத்தியுள்ளார்.

முடிவடைந்த போட்டிகளின் முடிவுகளின் படி அதிக இலக்குகளை (15) வீழ்த்தி சென்.மைக்கல் ஸ்போட்ஸ் கிளப் அணியைச் சேர்ந்த ரொனிஷான் பேர்ப்பிள் தொப்பியை தன் வசப்படுத்தியுள்ளார்.

இப்போட்டிகளுக்கு ஐவின்ஸ் இணையத்தளம் ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button