இலங்கைசமீபத்திய செய்திகள்
எழுச்சியுடன் ஆரம்பமானது UKMPL

உரும்பிராய், ஊரெழு, மயிலங்காடு, குப்பிளான் பிரதேசத்திற்குட்பட்ட வீரர்களின் திறமைகளை தேசிய மட்ட ரீதியில் வெளிக்கொணரும் நோக்கில் ஆரம்பிக்கபட்டு நடத்தப்பட்டு வருகின்ற UKM பிறிமீயர் லீக் போட்டிகள் நேற்று (28) மற்றும் நேற்று முன்தினம் (27) ஊரெழு முத்தமிழ் விளையாட்டு மைதானம் மற்றும் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானம் ஆகியவற்றில் இடம்பெற்றன.
வீரர்களின் திறமைக்கு களம் அமைத்துக்கொடுத்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் இச்சுற்றுப்போட்டிக்கு “Theepan Paints” நிறுவனத்தினர் பிரதான அனுசரணை வழங்கி வருகின்றனர்.
11 அணிகள் பங்கெடுத்து வருகின்ற இச்சுற்றுப்போட்டியின் நேற்று மற்றும் நேற்று முன்தினம் இடம்பெற்ற போட்டிகளின் பதிவுகள் இணைக்கப்பட்டுகின்றன.
இப்போட்டிகளுக்கு ஐவின்ஸ் இணையத்தளம் ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.







































