திறமைக்கு களம் அமைக்க ஆரம்பமாகின்றது UKMPL
“வீரர்களின் திறமைக்கு களம் அமைத்துக்கொடுக்கும் உன்னத நோக்கில்” UKM பிறிமீயர் லீக் போட்டிகள் நாளை (27) தொடக்கம் கோலாகலமாக ஆரம்பமாகின்றது.
யாழ்.மாவட்டத்தில் பிறிமீயர் லீக் பருவகாலப் போட்டிகள் அதிகரித்துவரும் நிலையில் தமது பிரதேச வீரர்களின் திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் UKM பிறிமீயர் லீக் போட்டிகள் ஆரம்பிக்கப்படுகின்றது.
இப் பிறிமீயர் லீக் துடுப்பாட்டப் போட்டிகளில், உரும்பிராய், ஊரெழு, குப்பிளான், மயிலங்காடு பிரதேசத்திற்குட்பட்ட வீரர்கள் மாத்திரமே இணைத்துக்கொள்ளப்பட்டு போட்டிகள் நடத்தப்படுவதே இப்போட்டிகளின் சிறப்பம்சமாகும்.
இதில்,
U – உரும்பிராய், ஊரெழு
K – குப்பிளான்
M – மயிலாங்காடு
PL – பிறிமீயர் லீக் என UKMPL இன் விரிவாக்கம் விளக்கப்படுகின்றது.
இச்சுற்றுப்போட்டியில், Neervai Pasanka ( நீர்வேலி), Young Fighters (நீர்வேலி), Atchelu Strikers (அச்செழு), Gnanamurukan Sports Club ( மயிலங்காடு), Urelu Royals ( ஊரெழு), Royal S.C (ஊரெழு), S.T Michel Sports Club (உரும்பிராய்), Mighty Lions, Eagles Cricket Club (உரும்பிராய்), ஞானகலா (குப்பிளான்) Urumpirai Cricket Club ஆகிய 11 அணிகள் போட்டிகளில் பங்கெடுக்கின்றன.
ஒவ்வொரு அணிகளுக்குமான வீரர்கள் தெரிவு ஊரெழு, உரும்பிராய், மயிலங்காடு, குப்பிளான் பிரதேசங்களுக்கு உட்பட்ட வீரர்கள் ஏலத்தெரிவின் மூலம் அணிகளுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இப்போட்டிகள் ஊரெழு முத்தமிழ் விளையாட்டு மைதானம் மற்றும் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானம் ஆகியவற்றில் நாளையதினம் கோலாகலமாக ஆரம்பமாகின்றன.
இப்போட்டிகள் தொடர்ச்சியாக சிறப்பாக இடம்பெற்று நிறைவுற ஐவின்ஸ் தமிழ் செய்தி இணையத்தளம் இறைவனைப் பிரார்த்திப்பதுடன், இப்போட்டிகளுக்கு ஐவின்ஸ் இணையத்தளம் ஊடக அனுசரணை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.