யாழ் வைத்தியசாலை பணிப்பாளர் அரச அதிபர் மீது குற்றச்சாட்டு
(யாழ்.மாவட்ட விசேட நிருபர்)
யாழ்.மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை அல்லது பற்றாக்குறையை முகாமை செய்வதற்கு ஆக்க பூர்வமான திட்டமிடலுடன கூடிய நடவடிக்கையை எடுக்க அரச அதிபர் தவறி விட்டார் எனவும்
இதனால் யாழ்.மாவட்டம் பல பாரிய பிரச்சினைகளையும் தேவையற்ற சண்டைகளையும் கைதுகளையும் சந்திக்கின்றது எனவும், பெறுமதியான மனித வளங்கள் நாள்பூராகவும் வீதிகளில் வீணாகி போகிறது எனவும் அரச அதிபரின் நிர்வாக திறன் இன்மையே இந்த நிலைக்கு காரணம் என நேற்று இடம்பெற்ற ஒரு ஊடக சந்திப்பில் யாழ் வைத்திய சாலை பிரதி பணிப்பாளர் மருத்துவர் யமுணாணந்தா குற்றம் சாட்டியுள்ளார்.
உடனடியாக இந்த எரிபொருள்
விநியோகம் அரச அதிபரால் சீர் செய்யப்படாவிடில் ஓரிரு தினங்களில் யாழ்.போதனா வைத்தியசாலை இயங்க முடியாத நிலை
ஏற்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார் .
நேற்றைய தினம் நாள் முழுவதும் பெற்றோல் நிரப்புவதற்காக சுகாதார ஊழியர்கள் கடமையை விட்டு விட்டு வீதிகளில் நேரத்தை வீணாக்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.