தேர்தல் ஒன்றை நடத்தும் நிலைமை தற்போது நாட்டில் இல்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“21 ஆம் திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எனவும், ஜனாதிபதி நிறைவேற்று அதிகார முறையை இல்லாதொழிக்குமாறு பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதனை செய்வதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால் நாடு தற்போது உள்ள நிலையில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியாது.
தேர்தல்களை நாட்டில் நடத்துவதற்கு முன்னர் தற்போது நாடு எதிர்நோக்கும் பிரச்சனைகளை தீர்த்து நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டியதே தற்போதுள்ள அரசாங்கத்தின் முக்கிய கடமையாக உள்ளது” என்றார்.