பாகிஸ்தானில் இருந்து உருளைக்கிழங்கு என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்பட்ட பீட்ரூட் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
30 லட்சம் ரூபா பெறுமதியான 16 ஆயிரம் எடை உடைய உருளைக்கிழங்கு என்ற போர்வையில் இறக்குமதி செய்யப்பட்ட பீட்ரூட் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த பீட்ரூட் தொகை உருளைக்கிழங்கு அடங்கிய பைகளை ஒத்த பைகளில் பொதியிடப்பட்டு குறித்த கொள்கலன்களின் உள்பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.