புதிதாக ரணில் பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், உடனடியாக ரணிலை எதிர்ப்பதில்லை என்றும், எதிர்க்க வேண்டிய விடயங்களை மட்டும் எதிர்ப்பது என்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று (15) சூம் செயலி மூலம் இடம்பெற்றது. இதன்போதே மேற்குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், இலங்கை தமிழரசு கட்சித்தலைவர் மாவை.சோ.சேனாதிராசா, புளொட் கட்சித்தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ கட்சித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், கோவிந்தம் கருணாகரன், பா.சத்தியலிங்கம், ஆர்.இராகவன், கு.சுரேன் ஆகியோர் பஙகெடுத்தனர்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பவுள்ள ஜனாதிபதி கோட்டபாயராஜ பக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரிக்கின்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.
பிரதி சபாநாயகர் தெரிவில் பெரமுன சார்பானவருக்கு ஆதரிப்பதில்லையெனவும், எதிர்கட்சி பொருத்தமானவரை பரிந்துரைத்தால் அதுபற்றி நாடாளுமன்ற குழு கூடி முடிவெடுக்கலாம் என்ற முடிவும் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.