ஜோன்ஸன் பெர்ணான்டோ, சனத்நிஷந்த போன்ற முட்டாள்களின் கதையைக் கேட்டதானாலேயே கோட்டபாயவின கழுத்து அறுபடும் நிலைக்கு வந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜோன்ஸ்டன் போன்றவர்கள் பழைய அரசியலை இனியும் செய்யலாம் என்று சிந்திக்கின்றார்கள். அது இனி மக்களிடம் எடுபடாது.
மக்களின் போராட்டத்தை அடக்க இவர்கள் முயற்சித்தார்கள். இதனாலேயே அவர்கள் வீடுகளைக்கூட இழக்க நேரிட்டது.
மக்கள் உண்பதற்கு உணவு இன்றி, குடிப்பதற்கு நீர் இல்லை, நோய்களுக்கு மருந்துகள் இல்லை மக்களால் வாழ்க்கையை நடத்த முடியாத நிலையிலேயே தான் வீதிக்கு இறங்கி போராடுகின்றார்கள். அவர்கள் போராட்டத்தை எம்மால் அடக்கிவிட முடியாது.
எனவே, தயவு செய்து உடனடியாக நாட்டின் ஜனாதிபதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பதவி விலக வேண்டும். இதனை தவிர வேறு தீர்வுகள் இல்லை. ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடைக்கால அரசாங்கம், கூட்டு அரசாங்கம் பற்றி சிந்திக்க முடியாது. இவர்கள் நடந்துக்கொண்ட விதத்திற்கு அமைய கோட்டாபய ராஜபக்ச இடத்திற்கு செல்லவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ எங்களால் முடியாது.
நாங்கள் மக்களுடன் இருப்பதே இதற்கு காரணம். உடனடியாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிச் சென்றால், குறுகிய காலத்திற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரை நாடாளுமன்றத்தின் மூலம் நியமித்து, மிகவும் குறுகிய கால நிகழ்ச்சி நிரலின் கீழ் மக்களின் நிலைப்பாட்டை அறிய வேண்டும் – எனறார்.