இலங்கைசெய்திகள்

நாடு இன்று முடங்குகிறது!

கோட்டபாய அரசாங்கத்தை பதவி விலககோரி நாடு முழுவதும் இன்று (06) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

2000க்கு மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்களால் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தன.

அரசாங்கத்தை பதவி விலக கோரி காலிமுகத்திடலில் தொடர்ச்சியாக தன்னெழுச்சியாக இடம்பெற்று வரும் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இக் ஹர்த்தால் முன்னெடுக்கப் படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் பலவும் இன்று கடமையில் இருந்து விலகி இருக்கத் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், தனியார் போக்குவரத்து துறையும் ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து சேவைகள் அனைத்தும் வழமை போன்று இடம்பெறுமென இலங்கை போக்குவரத்துச் சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், அத்தியாவசிய சேவைகளும் வழமைபோன்று இடம்பெறுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இன்றைய ஹர்த்தாலை முன்னிட்டு நாடு முழுவதும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Back to top button