இந்தியாவிற்கு தப்பித்துச் செல்வதற்காக ஊர்காவற்துறையில் தங்கியிருந்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (03) அதிகாலை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட நால்வரும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா பூவரசங்குளத்தைச் சேர்ந்த ஒருகுடும்பத்தினரே இவ்வாறு தப்பிச் செல்ல தங்கியிருந்த வேளையில், கைதாகியுள்ளனர்.