ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் – வீடு செல்கின்றனர் தாயும் பிள்ளைகளும்!!
srilanka

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கடந்த மாதம் 21 ஆம் திகதி நாரஹேன்பிட்டி நைன் வேல்ஸ் வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த ஆறு குழந்தைகள் பதிவாகியிருந்தனர்.
சுமார் ஒரு மாத காலத்தின்பின் இன்று (20) வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்கள்.
மகப்பேறு மற்றும் மகப்பேறு மருத்துவர் பேராசிரியர் டிரன் டயஸ் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட சிசேரியன் மூலம் பிறந்த மூன்று பெண் பிள்ளைகளும் மூன்று ஆண் பிள்ளைகளும் 31 வயதான தாயும் சிகிச்சைமுடிந்து வெளியேறினர். இதன்போது வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களின் அன்பான கவனிப்பில் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குழந்தைகளுக்கான சிறு பிரியாவிடை நிகழ்வும் வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதில் ஷிரந்தி ராஜபக்ஷவும் பங்குபற்றினார்
இந்நிகழ்வில் பல அனுசரணையாளர்கள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தேவையான பல்வேறு பொருட்களை வழங்கினார்கள்.