15 நாட்களுக்குப் பிறகு சிங்கப்பூரை விட்டு வெளியேறுமாறு கோட்டாபய ராஜபக்சவுக்கு கூறியுள்ளது சிங்கப்பூர் அரசு..
இதனால் ,அடைக்கலம் கோரி அவர் இந்தியாவை அணுகியதாகவும் ஆனால் அவரது கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது…
இதனால் கோட்டாபய ராஜபக்சவுக்கு மேலும் சிக்கல்கள் இருப்பதாகத் தெரிகிறது,
கடந்த புதன்கிழமை தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் இராணுவ ஜெட் விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறி மாலைதீவுக்குச் சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார் கோட்டா .
மாலைதீவில் இருந்து அவர் வியாழக்கிழமை சிங்கப்பூர் சென்றார்.சிங்கப்பூரில் இருந்து வெளியேறி பாதுகாப்பான நாடொன்றுக்கு செல்ல முடியாதபட்சத்தில் கோட்டா மீண்டும் இலங்கை திரும்பலாமென சொல்லப்படுகிறது..
முன்னாள் ஜனாதிபதி என்ற சிறப்புரிமை அவருக்கு இருப்பதால் , அவருக்குரிய பாதுகாப்பு வழங்கப்படலாமென தெரிகிறது.இதனை குயிக் நியூஸ் இணையதளம் ஆரூடம் செய்துள்ளது