அமரர் வீரகத்தி கற்பகம்
1 ஆம் வருட நினைவுதினத்தை முன்னிட்டு 250000 ரூபாவுக்கு மேற்பட்ட உதவிகள். வழங்கி வைப்பு
சாவகச்சேரி மட்டுவில் தெற்கை
பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட காலம் சென்ற வீரகத்தி கற்பகம்
என்ற புண்ணியத் தாயின் மறைவின் 1 ஆம் ஆண்டு நிறைவு நினைவை முன்னிட்டு அவரது
பிள்ளைகளின் , மருமகனின் நிதி பங்களிப்பில்
மட்டுவில் தெற்கு பகுதியில் வசிக்கும் பெண்தலைமைத்துவ , வேலை அற்றிருக்கும் வறுமை நிலையான 40 குடும்பங்களுக்கு தலா 5000 வீதமும் சன சமூக நிலையம் ஒன்றுக்கு 15000 நிதி உதவியும்
விலேச் ரூ சிற்றி கிளப் ஊடாக
மாங்குளம் உயிரிழை நிறுவன பயனாளிகளுக்கான உணவு , மருந்து , என்பவற்றை 20000 ரூபாவுக்கு மேற்பட்ட செலவிலும் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது,
இறப்பின் பின்னரும் பிறப்பின் மகிமை பேசும் இவ்வாறான
உதவிகள் வழங்கிய உறவினர்களுக்கு நீண்ட ஆயுள்
கிடைக்கவும அன்னாரின் ஆத்மா சாந்தி பெறவும்
ஐவின்ஸ் இணைய தளமும் பிரார்த்திக்கின்றது .