நாளை (13) பல பிரதேசங்களில் 10 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை நிறுத்துவதற்கு நீர் வழங்கல் சபை தீர்மானித்துள்ளது.
*இரத்தோட்டை, கைகாவல மற்றும் வேரகம* ஆகிய பிரதேசங்களுக்கே நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை இரவு 8.00 மணி முதல் நாளை மறுநாள் (14) காலை 6.00 மணி வரை அந்தப் பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும்.
இரத்தோட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசர திருத்த வேலைகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.