நேற்று இரவு வவுனியாவில் உள்ள தனியார் கல்வி நிலையத்தில் ஆசிரியர் ஒருவரை ◌ாணவர்கள் தாக்க முற்பட்ட போது ஆசிரியருக்கு அருகில் நின்ற மாணவன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் தலையில் காயமடைந்த குறித்த மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு முன்பாக நேற்று (16) மாலை ஒன்று கூடிய மாணவர்கள் அங்கு நின்ற மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் போது அதனைத் தடுத்த ஆசிரியர் மீது
தலைக்கவசத்துடன் நின்ற மாணவர் ஒருவர் தாக்க முற்பட்டுள்ளார். இதன்போது அருகில் நின்ற மாணவர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வி நிலையத்தில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்ட 19 வயது மாணவர் காயமடைந்து வைத்தியசாலை விபத்துப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச்சம்பவம் குறித்து காயமடைந்த மாணவனின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது.