இலங்கைக்கு ரஷ்யா முக்கிய நிபந்தனை ஒன்றை விதித்துள்ளது.
மீண்டும் ஒருமுறை ரஷ்யா விமானம் தடுத்து நிறுத்தப்படுவது போன்ற சம்பவம் நடக்காமல் இருப்பதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக மொஸ்கோ நகரத்தில் இருந்து, ரஷ்ய ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதியின் பேச்சாளர் மேலும் தெரிவிக்கையில் விமானப் பயணங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அண்மையில் Aeroflot விமானம் தடுத்து வைக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருப்பதை இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.