மட்டுவில் மண் பெற்ற
புதல்வன்யாய்
உறவுகள் போற்றும்
உன்னதனாய்…
அன்பினிய கண்வனாய்
பாசமுள்ள தந்தையாய்..
நடையில் மிடுக்கோடு
படையப்பா எனும்
பெயர்தாங்கி வாழ்ந்த எம் அன்புறவே…
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எங்கள் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்……
மண் விட்டு மறைந்து
நீங்கள் விண்நோக்கிச் சென்றாலும் – எம்
நினைவெனும் தீபத்தில்
நித்தமும் ஒளிர்வீர்கள்…
ஆண்டொன்று ஆனதுவோ
அவனிவிட்டு நீங்கள் சென்று….
ஆறாது தவிக்கிறோம்,
உங்கள் ஞாபகத்துடன்…….
குடும்பத்தினர் . – மட்டுவில் தெற்கு