முன் எப்போதும் இல்லாத வகையில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த காலங்களில் வெளிநாடுகளில் தொழில் புரிவோர் ஆயிரத்து 255 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பி இருந்தனர்.
எனினும் இந்த ஆண்டு அந்த தொகையானது 464.1 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளது. கடந்த காலங்களில் அந்நிய செலாவணி சந்தையை செயற்கையாக கட்டுப்படுத்தி வைத்திருந்ததன் காரணமாக இலங்கைக்கு டொலர்கள் வருவது வீழ்ச்சியடைந்தது.
இதன் காரணமாக இலங்கைக்கு 5 ஆயிரத்து 500 மில்லியன் டொலர் கிடைக்காமல் போயுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதற்கான காரணங்கள் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர்களை அனுப்பாமை மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தமை என்பனவாகும் என கூறப்படுகிறது.