இலங்கைசெய்திகள்பொருளாதார செய்திகள்

நிதி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Ministry of finance

  இலங்கை அரசாங்கம் தனது வருமானத்தை நிர்வகிப்பதற்கான முறையைப் பின்பற்றும் என்ற உத்தரவாதம் கடனளிப்பவர்களுக்கு தேவை என்றும்   அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால், நாட்டின் கடன் வழங்கும் நாடுகளும், நிறுவனங்களும் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிக்காது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

 இவை சாத்தியப்படுத்தப்படாவிட்டால் 2022 இல் ஏற்பட்ட நெருக்கடியை விடவும் எதிர்காலத்தில் நாம் அதிக நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அது மிகவும் பாரதூரமான சூழ்நிலையாக இருக்கும் என்றும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால்  உலகில் எந்த ஒரு நாட்டின் ஆதரவின்றி இலங்கை தனிமைப்படுத்தப்படும் எனவும் வருமான வரிச்சட்டம் உள்ளிட்ட புதிய திருத்தங்களுக்கு ஆதரவு அளிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related Articles

Leave a Reply

Back to top button