யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் ஒரு துறையாக விளங்கும் கல்வியியற் துறையின் வாணி விழாவும் ஆசிரியர்தினமும்
கடந்த புதன்கிழமை (5/10/2022) விஜயதசமியன்று பல்கலைக்கழக கல்வியற்துறை விரிவுரை மண்டபத்தில் சிறப்புற இடம்பெற்றது .
கல்வியியற் துறை தலைவி கலாநிதி ஜெ இராசநாயகம் மற்றும் விரிவுரையாளர்களின் வழிகாட்டலில் கல்வியற் துறை முழு நேர பட்ட பின்படிப்பு கல்வி டிப்ளோமா 2020 ஆம் ஆண்டு ஆசிரிய மாணவரகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு முற்பகல் 11 மணியளவில் தொடங்கி பிற்பகல் 1 மணிவரை இடம்பெற்றது.
இந்த நிகழவில் வாணி பூசையும் விரிவுரையாளர்கள் கௌரவிப்பும் கலைநிகழவுகளும்
விரிவுரையாளரகளின் உரையும் இடம்பெற்றது . கல்வியியற் துறை ஆரம்பிக்கப்பட்டதிற்கு இத்துறை கொண்டாடிய முதலாவது வாணி விழாவாக இதுவே அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது .