Breaking Newsஇலங்கைசெய்திகள்

விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் பொலிசில் தஞ்சம் – யாழில் பரபரப்பு சம்பவம்!!

Jaffna

யாழ்ப்பாணம், தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலை விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரியின் தாக்குதலை தாங்க முடியாமல், 11 பாடசாலை மாணவிகள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக  தெரிவிக்கபப்டுகின்றது.

ஊர்காவற்றுறை,   பெண்கள் பாடசலையொன்றின் விடுதியில் தங்கியிருந்த மாணவிகளே, பாதிக்கபப்ட்ட நிலையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

10 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவிகளே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். கடந்த 3 வருடங்களாக தாம் கடுமையாக தாக்கப்பட்டு வருவதாக மாணவிகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அகப்பை காம்பு, தடியால் தாக்குவது, தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென, விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த 3 வருடங்களாக தம்மை சித்திரவதை செய்வதாக மாணவிகள் கண்ணீருடன் முறையிட்டுள்ளனர்.

ஆங்கில உச்சரிப்பு தவறு, ஆங்கிலம் முறையாக பேசாதது, பிரார்த்தனையை முறையாக மனனம் செய்யாதது உள்ளிட்ட காரணங்களிற்காகவே அருட் சகோதரி தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்படுகிறது. அத்துடன், மாணவிகளை கெட்ட வார்த்தைகளையும் உபயோகித்து திட்டுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து பொலிஸில் சரணடைந்த 11 மாணவிகளும் இன்று ஊர்காவற்றுறை பொலிசாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசலை சட்டவைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில்  மாணவிகளிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர்களின் உடலில் தாக்கப்பட்ட தழும்புகள் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதேவேளை அன்பே உருவானவர்கள் அருட்சகோதரிகள் என கூறப்படும் கூற்றை இது போன்ற சிலரின் நடவடிக்கையால் அது இல்லாமல் செய்துவிடுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

அடிக்கடி இவ்வாறான செய்திகள் வெளியாவதால் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் தொடர்பில் அரசாங்கம் கூர்மையான அவதானிபாபும் அக்கறையும் கொண்டிருக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

Related Articles

Leave a Reply

Back to top button