தென்மராட்சியின் அடையாளமாக புது உத்வேகம் எடுக்கிறது மட்டுவில் ஐங்கரன் கச்சாய் வெலிகிங்ஸ் விளையாட்டுக் கழகங்கள்!!
Jaffna

2022 ஆம் ஆண்டிற்கான யாழ். மாவட்ட கரப்பந்தாட்ட சங்க போட்டித்தொடரானது மாவட்டத்தில் கரப்பந்தாட்டத்தினை மேம்படுத்துவதற்காகவும், பிரபல்யப்படுத்துவதற்காகவும் B பிரிவினரிற்கான போட்டித் தொடரானது யாழ், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, தீவகம் மற்றும் கோப்பாய் என 6 பிரந்திய ரீதியான தகுதிச்சுற்றுடன் ஆரம்பமாகி; இரண்டாவது சுற்று பிரந்தியங்களிலிருந்து தகுதிபெற்ற அணிகள், கடந்த வருட B பிரிவு அரையிறுதிப் போட்டியாளர்கள் மற்றும் A பிரிவிலிருந்து தரமிறக்கப்பட்ட அணிகள் என பலத்த போட்டி மிகுந்ததாக அமைந்தது.
16 அணிகள் மோதிய மாவட்ட சுற்றிலிருந்து, அரையிறுதியில் முறையே அச்சுவேலி கலைமகள், அரியாலை ஜக்கியம் ஆகிய அணிகளினை வெற்றிகொண்டு மட்டுவில் ஐங்கரன், கச்சாய் வெலி கிங்ஸ் அணியினர் தென்மராட்சியின் அடையாளமாக இன்றைய இறுதிப்போட்டியில் களம் காணுகின்றனர்.
இன்று இரவு சிறுப்பிட்டி கலையொளி மைதானத்திற்கு கரப்பந்தாட்ட ஆர்வலர்கள் அனைவரையும் ஏற்பாட்டாளரகள்
அன்புடன் அழைக்கின்றாரகள்