சினிமாசெய்திகள்

கப்டன் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில்!!

Captain Vijayakant

கடந்த 1980ஆம் ஆண்டு ’தூரத்து இடி முழக்கம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான விஜயகாந்த்இ ஆரம்பகாலத்தில் ஒரு சில படங்களில் வில்லனாக நடித்தாலும் அதன்பின் அனைத்து படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் நடித்த ’கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் தமிழ் திரை உலகில் ஒரு புதிய திருப்பத்தை கொடுத்தது என்பதும் அதன் பின் தொடர்ச்சியாக பல ஆக்ஷன் படங்களில் அவர் நடித்தார் என்பதும் அறிந்த விடயமே.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதை அடுத்து திரையுலகில் இருந்து விலகி இருந்தார். விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த ’சகாப்தம்’ என்ற திரைப்படத்தில் கடைசியாக சிறப்பு தோற்றத்தில் அவர் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் ’மழை பிடிக்காத மனிதன்’ என்ற திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் விஜயகாந்த் நடிக்க இருப்பதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் ஆண்டனி ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கும் இந்த திரைப்படத்தில் சரத்குமார்இ சரண்யா பொன்வண்ணன்இ தலைவாசல் விஜய் உள்பட பலர் நடிக்கின்றனர் என்பதும் இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Back to top button