உலகம்செய்திகள்

அமெரிக்காவில் குளிர்காலப் பனிப்புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்பு!!

Blizzard

அமெரிக்காவில் வீசி வரும் குளிர்கால பனிப்புயலால், நாட்டின் எரிசக்தி விநியோகம் சீர்குலைந்ததுடன், பல்லாயிரக் கணக்கான அமெரிக்கர்களின் விடுமுறை பயணத்திட்டம் தடைப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில், பனி மற்றும் அதீத குளிர்ந்த காற்று வீசி வரும் நிலையில், பனிப்புயலால் ஒஹியோவில், 50 வாகனங்கள் அடுத்தத்து மோதி விபத்துகுள்ளாகின.

மொண்டானா முதல் டெக்சாஸ் வரை பனிபுயல் தாக்கம் நீடித்து வரும் நிலையில், சுமார் 24 கோடி பேர் பனிப்புயல் எச்சரிக்கையின் கீழ் வருகின்றனர்.

அமெரிக்காவில் சுமார் ஐந்தாயிரத்து 200 விமானங்கள் நேற்று ரத்தானதாக கூறப்படும் நிலையில், சுமார் 11 கோடி பேர் விடுமுறையை ஒட்டி பயணம் செய்ய திட்டமிட்டுருந்ததாகவும், அதன் எண்ணிக்கை தற்போது குறையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Back to top button